Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 மாதத்தில் 2 கோடி விற்பனை; சாம்சங் கேலக்ஸி எஸ் 4 சாதனை!

2 மாதத்தில் 2 கோடி விற்பனை; சாம்சங் கேலக்ஸி எஸ் 4 சாதனை!
, வியாழன், 25 ஜூலை 2013 (15:56 IST)
FILE
சாம்சங் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, அந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போன் விற்பனை, இதுவரை 2 கோடியை எட்டியுள்ளது. இது அறிமுகமாகி இரண்டு மாதத்தில் ஏற்பட்டுள்ள விற்பனையாகும்.

இதன் முந்தைய வெர்ஷனான சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட்போனின் விற்பனையைக் காட்டிலும் இதன் விற்பனை 1.7 பங்கு வேகமாகும். இப்படியே இதன் விற்பனை தொடருமானால், சாம்சங் நிறுவனத்தின் மிகப்பிரபலமான ஸ்மார்ட்போன் 'கேலக்ஸி எஸ் 4' ஆக இருக்கும்.
webdunia
FILE

இந்தியாவில் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போனைக் கொடுத்து, சாம்சங் எஸ் 4 வாங்குவோருக்கு அதன் விலையில் ரூ.5,000 தள்ளுபடி தரப்படுகிறது. எந்தெந்த ஸ்மார்ட்போன் என டீலரிடம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். அத்துடன், ரூ.2,499 மதிப்புள்ள ஸ்மார்ட் எஸ் வியூ கவர் இலவசமாகத் தரப்படுகிறது.

மேலும், வோடபோன் நிறுவனம் சலுகையாக சில சேவைத் திட்டங்களை கேலக்ஸி எஸ் 4 வாங்குவோருக்கு வழங்குகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil