Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"தேடல் எஞ்ஜினில் கூகுள் தொடர்ந்து முதலிடம்"

, சனி, 10 மார்ச் 2012 (17:49 IST)
வாஷிங்டன்: சிறந்த தேடல் எஞ்ஜின்களில் கூகுள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. "பெவ் இன்டெர்நெட் & அமெரிக்கன் லைஃப் புராஜெக்ட்" என்ற நிறுவனம் தேடல் எஞ்ஜின்கள் தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் மட்டும் 83 சதவீதம் பேர் தங்களுக்கு தேவையானவற்றை இணையத்தில் தேடுவதற்கு கூகுள் தேடல் எஞ்ஜினைப் பயன்படுத்துவதாகவும், அவர்களின் மிகவும் விரும்பமான தேடல் எஞ்ஜினாக கூகுள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு இது 47 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே 2004 ஆம் ஆண்டு 26 சதவீதமாக இருந்த யாகூ தேடல் எஞ்ஜின், 6 சதவீதம் குறைந்து இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


English Summary: Google is almost everyone's favorite search engine. A survey found 83 percent of U.S. search engine users rated Google as their preferred search engine.

Share this Story:

Follow Webdunia tamil