லேப்டாப் பாதுகாப்புக்கு சில யோசனைகள்
, திங்கள், 10 பிப்ரவரி 2014 (18:57 IST)
இன்றைய யுகத்தில் கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அவசியம். அதிலும் லேப்டாப், டேப்லட்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. லேப்டாப் பாதுகாப்புக்கான சில யோசனைகள் இங்கே..
லேப்டாப்பின் திரை மிக முக்கியம். திரையை துடைக்கும் போது சரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும். திரை மிக அழுத்தினால் சேதமடையவும் வாய்ப்புகள் உண்டு. பயணம் செய்யும் போது லேப்டாப்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். லேப்டாப்பை தூக்கிச் செல்ல முதுகில் மாட்டும் பேக்கை பயன்படுத்துங்கள். உணவு நேரம் அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் நேரம் ஆகிய நேரங்களில் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைப்பதுடன் லேப்டாப்பிற்கு அதிக ஆயுளை தரும். தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் லேப்டாப்பை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், லேப்டாப்பை அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும்.