Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைலில் பேட்டரி ஆயுளை அதிகரிப்பது எப்படி?

Webdunia
சனி, 2 மார்ச் 2013 (13:18 IST)
FILE
சாதாரண போன்களுக்கு பெரிதாக எந்தச் சிக்கலும் வராது. அனால் இந்த ஸ்மார்ட்போன்கள் எனப்படுகிற அதிநவீன சிறப்பம்சங்கள் கொண்ட போன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களை வாங்கிவிட்டு பலர் செல்போன் பேட்டரி நிக்கவில்லை என்று புலம்புகின்றனர்.

வைஃபை: உங்களுடைய ஸ்மார்ட்போனில் Wi-Fi வசதியிருந்தால் அதை கவனிக்கவும். ஏனெனில் சில நேரங்களில் அதை அணைக்க மறந்தீர்கள் என்றால் செல்போன் பேட்டரி எளிதில் தீர்ந்துவிடும்.

பேட்டரியை அவ்வப்போது செக் செய்யவும்: உங்களுடைய செல்போன் பேட்டரி எளிதில் குறைகிறதென்றால் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள சிறப்புப் பகுதியை அடிக்கடி செக் செய்யவும்.

செட்டிங்க்ஸ்>> about phone>> பேட்டரி யூஸ் என்ற வகையில் சென்று தகுந்த அளவை பெறலாம்.

சார்ஜரும் முக்கியம்: சில நேரங்களில் சார்ஜரும் சொதப்பும். எனவே சற்றே நல்ல சார்ஜரை வாங்கவும். ஏனென்றால் சில நேரங்களில் உங்களுடைய போனின் பேட்டரி நிரம்பிவிட்டதாக காட்டிவிடும். இம்மாதிரி சிக்கல்கள் கார்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு தெரியும்.

நீங்கள் 3ஜி பயன்படுத்துபவரா?: நீங்கள் 3ஜி இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துபரானால், உங்கள் பேட்டரி எளிதில் தீருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தேவையில்லாத நேரங்களில் 3ஜி சேவைகளை நிறுத்திவையுங்கள்.

போனின் பிரைட்னஸ்: உங்களுடைய போனின் பிரைட்னஸ் அளவை குறைத்தாலும் பேட்டரியின் பயன்பாடு குறைவாகவே இருக்கும். அதிலும் பகல்வேளைகளில் பிரைட்னஸ் குறைவாக இருப்பதே நன்று!

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments