Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னிலை வெப் பிரவுசராகிறது கூகுள் குரோம்

முன்னிலை வெப் பிரவுசராகிறது கூகுள் குரோம்
, வியாழன், 24 மே 2012 (18:10 IST)
இன்டெர்னெட்வாசிகள் பயன்படுத்தும் புகழ்பெற்ற பிரவுசர்களில் ஒன்றான இன்டெர்னெட் எக்ஸ்புளோரரை பயன்படுத்துவோரை விட கூகுள் குரோமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகம் முழுதும் கடந்த 2 வாரங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி கூகுள் குரோம் பயனாளர்கள் விகிதம் 32.5% ஆகவும் இன்டெர்னெட் எக்ஸ்புளோரர் பயனாளர்கள் விகிதம் 32.1%ஆகவும் இருந்தது.

இன்டெர்னெட் எக்ஸ்புளோரர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2011-இல் கூகுள் குரோம், ஃபயர்ஃபாக்ஸை முந்தியது ஆனால் எக்ஸ்புளோரரைவிட குறைவாகவே இருந்தது.

வார இறுதிகளில் கூகுள் குரோம் பயனாளர்கள் அதிகரித்தனர் என்பது தெரியவந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் கூகுள் குரோம் பயனாளர்கள் எண்ணிக்கை எக்ஸ்புளொரரை விஞ்சியுள்ளது.

புகழ் பெற்ற வெப் ஆய்வு நிறுவனமான ஸ்டேட்கவுண்டர் இந்தத் தக்வல்களை வெளியிட்டுள்ளது.

ஆனாலும் நாடு ரீதியாகப் பார்க்கும்போது முடிவுகள் மாறியுள்ளன. உதாரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் பயனாளர்கள் பெரிதும் எக்ஸ்புளோரர் பிரவுசர்களையே விரும்புகின்றனர்.

குரோமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் அதிகம் என்று கூறியுள்ளது இந்தப் புள்ளிவிவரம். ஐரோப்பாவிலும், வர அமெரிக்காவிலும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குரோம் முன்னிலை வகிக்கிறது. அதாவது மோசில்லா ஃபயர்ஃபாக்ஸைக் காட்டிலும் குரோம் பயன்பாடு அதிகம்.

மற்றபடி ஜப்பான், சீனா, தென் கொரியா, ஆகிய நாடுகளில் ஒட்டுமொத்த இன்டெர்னெட் போக்குவரத்தில் இன்டெர்னெட் எக்ஸ்புளோரரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil