Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் மனம் கவர்ந்த புதிய HTC T328D Desire VC ஸ்மார்ட்போன்

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2013 (15:54 IST)
FILE
ஹெச்.டி.சி நிறுவனம் புதிய HTC T328D Desire VC என்ற ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்கியுள்ளது. இதன் ஆட்டோ ஃபோக்கஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளிட்ட அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும் வண்ணம் உள்ளது.

ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேக கோர்டெக்ஸ் A 5 ப்ராசஸர், ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 சிஸ்டம், ஏ-ஜி.பி.எஸ். சப்போர்ட் ஆகியவற்றை சில முக்கிய வசதிகளாகக் குறிப்பிடலாம்.

FILE
இதில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. என இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 119.5 X 62.3 X 9.5 மிமீ. எடை 119 கிராம். பார் வடிவில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. திரை 4 அங்குல அகலம் கொண்டது. மல்ட்டி டச் வசதி கிடைக்கிறது.

லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஸ்டோரேஜ் மெமரியாக 4 ஜிபி, ராம் மெமரி 512 எம்.பி. என இதன் வசதிகள் உள்ளன. 3ஜி போனாக, ஜி.பி.ஆர்.எஸ். வசதி கொண்டுள்ளது. வை-பி இணைப்பு கிடைக்கிறது.

FILE
A2DP இணைந்த புளுடூத் 3.0. தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் வசதி கிடைக்கிறது. குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் சிப் செட் இயங்குகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் ஆகியன உள்ளன.

எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர் ஆகியனவும் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோர் பெற அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், காலண்டர், கூகுள் டாக், ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ ஆகிய வழக்கமான வசதிகளும் உள்ளன.

இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,650 mAh திறன் கொண்டு இயங்குகிறது. இந்த மொபைல் போனின் அதிகபட்ச விலை ரூ.14,499 ஆகும்.

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

Show comments