Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210 ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210 ஸ்மார்ட்போன் அறிமுகம்
, திங்கள், 22 ஜூலை 2013 (21:01 IST)
FILE
இந்திய மொபைல் போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸின் கேன்வாஸ் வரிசை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த வரிசையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

கேன்வாஸ் 4 ஏ210 ஸ்மார்ட்போனில், 1280 X 720 பிக்சல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 5 அங்குல திரை ஐபிஎஸ் பேனல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், காட்சியின் தன்மையும், வண்ணக் கலவையும் சிறப்பாக உள்ளது. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி 220 மணி நேரம் மின் சக்தியைத் தங்க வைக்கிறது. இதன் மூலம் 480 நிமிடம் பேச முடிகிறது. இதன் பரிமாணம் 144.5 X 73.8 X 8.9 மிமீ. 158 கிராம் எடை கொண்ட இந்த போன் பார் வடிவத்தில் உள்ளது.

இரண்டு சிம்களை இயக்கும் இந்த கேன்வாஸ் போன், கிரே மற்றும் வெள்ளை கலரில் கிடைக்கிறது. 13 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா 4208 X 3120 பிக்சல்களில் படம் தருகிறது. ஸூம், பிளாஷ் கிடைக்கிறது. இரண்டாவது கேமராவும் தரப்பட்டுள்ளது. புளுடூத், வைஃபை மற்றும் யு.எஸ்.பி இணைப்புகள் நெட்வொர்க் செயல்பாட்டினை எளிதாக்குகின்றன.

webdunia
FILE
ஜி.பி.எஸ், ஜி.பி.ஆர்.எஸ், எட்ஜ், 3ஜி ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இணைய தேடலுக்கு ஆண்ட்ராய்ட் வெப்கிட் கிடைக்கிறது. ஆடியோ, வீடியோ, எப்.எம் ரேடியோ இயங்குகின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் மற்றும் மின் அஞ்சல் வசதிகள் உள்ளன. ஆண்ட்ராய்ட் 4.1.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210 ஸ்மார்ட்போனின் அதிக பட்ச விலை ரூ.17,999/-

Share this Story:

Follow Webdunia tamil