Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய அசுஸ் போன்பேட் டேப்லட் அறிமுகம்

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2013 (17:55 IST)
FILE
அசுஸ் என்ற நிறுவனம் இன்டெல் செயலியுடன்( processor), 3 ஜி இணைப்புடன், ஆன்ராய்டு 4.1 இயங்குதளத்தில் செயல்படும், கைபேசியின் அனைத்து செயல்முறைகளையும் கொண்ட போன்பேட்( phonepad) என்ற 7 அங்குல அளவுள்ள புதிய போப்லட்( phablet) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போன்பேட் டேப்லட் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.15,999 என்று நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஃபோன்பேட் இன் சிறப்பம்சங்கள் வருமாறு,

5 முதல் 7 அங்குல் அளவுள்ள தொடுதிரை
ஆன்ராய்டு 4.1 இயங்குதளம்
இன்டெல் செயலி 2420
3 ஜி இணைப்பு
எடை 340 கிராம்
8 ஜிகாபைட் இன்டெர்னல் நினைவாற்றல்
32 ஜிகாபைட் வரை நினைவாற்றல் அட்டையை சேர்த்துக் கொள்ளலாம்
9 மணி நேரம் வரை மின்கலம் செயல்படும் திறன்
1.2 மெகாபிக்சல் முன் பக்க கேமரா
3 மெகாபிக்சல் முதன்மை கேமரா
முதன்மை கேமராவின் மூலம் 720 பிக்சல் கொண்ட காணொளியை பதிவு செய்யலாம்
இசையின் ஒலி தரத்திற்காக சோனிக் மாஸ்டர் ஒலி தொழில்நுட்பமும், மேக்ஸ் ஆடியோ 3 செயலி ஒலி தொழில்நுட்பமும் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அசுஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குநரும், தெற்காசிய மேலாளருமான பீட்டர் ச்சாங் கூறுகையில், அசுஸ் போன்டெட் 3ஜி இணைப்புடன் கூடிய கைபேசியின் அனைத்து வசதிகளுடன் கூடிய, டேப்லட்டும், ஸ்மார்ட்போனும் சேர்ந்த பொருத்தமான கலவை என்று கூறினார்.

இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய நிர்வாக இயக்குநரான டெப்யானி கோஷ் இந்த அறிமுக விழாவில் பேசிய போது, பெரிய தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போன் செய்யும் அனைத்து விதமான செயல்முறைகளையும் செய்யும் போன்பேட், சந்தையில் புதியதொரு தயாரிப்பாகும், தற்போது இதை சந்தைப்படுத்துவது மிக மிக அவசியமான ஒன்று என்றும், போன்பேட் விற்பணையில் வருங்காலத்தில் ஆசிய பசுபிக் சந்தையில், 50 சதவீதத்தை அடையும் என்றும் கூறினார்.

மேலும் ஆன்ராய்டு இயங்குதளத்தில் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்கள் இயங்கும்படி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளதாக கோஷ் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments