Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோக்கியா லூமியா 620 வெளியாவதில் தாமதம்

நோக்கியா லூமியா 620 வெளியாவதில் தாமதம்
, செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (19:50 IST)
FILE
விண்டோஸ் 8-ஐக் கொண்டு இயங்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா 620 இந்திய சந்தையில் களமிறங்கத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜனவரியில் வெளியான அறிவிப்பின் படி பிப்ரவரி 2 வது வாரத்தில் லூமியா 620 வெளியாகியிருக்க வேண்டும். நோக்கியாவின் லூமியா 920 மற்றும் 820 இந்தியாவில் வெளியாகி அபாரமாக விற்பனையாகிக் கொண்டுள்ளது. லூமியா 620 மாடலும் அதே நேரத்தில் வெளியாக வேண்டிய போன் தான். ஆனால் ஏதோ சில காரணங்களால் தாமதமாகி, மேலும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது.

webdunia
FILE
நோக்கியா லூமியா 620-இன் சிறப்பு அம்சங்கள்:

1GHz குவால்கம் ஸ்நாப்டிராகன் S4 பிராசஸர்

3.8 இன்ச் க்ளியர்பிளாக் LCD; 480X800 பிக்ஸல் திரை

விரிவுபடுத்தக்கூடிய வசதியுடன் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மெமரி

1200 mAh பேட்டரி

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Share this Story:

Follow Webdunia tamil