Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிவிட்டரின் வீடியோ பகிர்வு ஆப்ஸ் அறிமுகம்!

டிவிட்டரின் வீடியோ பகிர்வு ஆப்ஸ் அறிமுகம்!
, வெள்ளி, 25 ஜனவரி 2013 (16:57 IST)
FILE
ஐபோன், ஐபேட்களில் இயங்கும் விடியோ பகிர்வு ஆப்ஸ்-யை டிவிட்டர் வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் சிறந்த கருத்துப் பகிர்வுத் தளமான டிவிட்டர், ஐபோன் மற்றும் ஐபேட்களில் வீடியோ பகிர்வு செய்யப் பயன்படும் புதிய ஆப்ஸ் சேவையை வெளியிட்டுள்ளது.

ஆறு நிமிடங்கள் வரை ஓடும் வீடியோவை வைன் அப்ளிகேசன் மூலம் மிகச்சுலபமாக ஒரு டிவிட் செய்வதன் மூலம் மற்றவர்களுக்குப் பகிர முடியும். இந்த வைன் அப்ளிகேசனை உலகம் முழுவதும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் கட்டணமில்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டோகிராமில் உள்ள போட்டோ பகிர்வு முறையைப் போல டிவிட்டரில் வீடியோ பகிர்வு முறையைக் கொண்டு வந்துள்ளோம். கடந்த டிசம்பரில் ஏற்கனவே போட்டோ பகிர்வு முறையையும் டிவிட்டரில் பொருத்தியுள்ளோம். இந்த வீடியோ பகிர்வு வசதி இண்டெர்நெட்டில் பேஸ்புக் செய்வதற்கான வாய்ப்பே இல்லை எனவும் டிவிட்டரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil