Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் லேப்-டாப் விற்பனை அதிகரிப்பு

கேரளாவில் லேப்-டாப் விற்பனை அதிகரிப்பு
, வியாழன், 22 அக்டோபர் 2009 (13:27 IST)
நாடு முழுவதும் பொருளாதார தேக்கநிலை மாறி தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதாலும், கேரள மாநிலத்தில் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாலும் அம்மாநிலத்தில் மடிக்கணினிகள் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

டெஸ்க்டாப் கணினிகளைக் காட்டிலும், லேப்-டாப் விற்பனை உயர்வை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு லேப்-டாப் அத்தியாவசியத் தேவை என்பதால், அவற்றின் விற்பனை வேகமாக அதிகரித்து வருவதாக கணினித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தில் மொத்த கணினி விற்பனையில் 30 விழுக்காடு லேப்-டாப் ஆக உள்ள நிலை இந்த ஆண்டு இறுதிக்கும் 40 விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil