Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் + பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2012 (16:30 IST)
உலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள ்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது.

சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற நட்பு வலைத்தளத்தின் மீதான வாசகர்களின் ஆர்வம் அதிகரித்துவருவதே இதற்குக் காரணம். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இது பொதுமக்கள் பங்கேற்ப்புக்கு திறக்கபட்டது.

ஆனால் கூகுளின் போட்டி நிறுவனமான ஃபேஸ்புக் இதே 9 கோடி பயனாளர் எண்ணிக்கையை எட்ட 4 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் உலகம் முழுதும் இன்று 80 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது.

இது குறித்து கூகுள்+ இன் தலைமைச் செயலதிகாரி லாரி பேஜ் கூறுகையில், "நான் அதிகப்படியான மகிழ்ச்சியில் உள்ளேன், இன்று உலகம் முழுதும் 9 கோடி பயனாளர்கள் உள்ளனர். இது 3 மாதங்களுக்கு முன்பு நான் அறிவித்திருந்ததை விட இரு மடங்கு அதிகமாகும்" என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments