Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூகுள் நெக்சஸ் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

கூகுள் நெக்சஸ் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது
, வியாழன், 16 மே 2013 (18:22 IST)
FILE
கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் போன்கள் வரிசையில் புதிதாக "நெக்சஸ் 4" என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. கூகுள் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் தொழில்நுட்ப கூட்டமைப்பில் "நெக்சஸ் 4" உருவாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து "நெக்சஸ் 4" வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சூன் வோன் தெரிவித்துள்ளார்.

webdunia
FILE
நெக்சஸ் 4 -இல் குவால்கம் ஸ்நாப்டிராகன் எஸ்4 ப்ரோ ப்ராசஸர், 3டி கிராபிக்ஸ் & கேம் ப்ளே ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் இதுவரை வெளியான ஆன்ட்ராய்டு வரிசையில் அதிவேக 2GB RAM வசதி உள்ளது.

மேலும் நெக்சஸ் 4 -இல் அதிநவீன 8MB கேமரா, 320ppi திரை, கீரல் விழ வாய்ப்பே இல்லாத கோர்னிங் கொரில்லா கிளாஸ் 2 பொருத்தப்பட்டுள்ளது.

எல்ஜி நெக்சஸ் 4 ஸ்மர்ட்போனின் இந்திய விலை ரூ.25,999 ஆகும். இந்த ஸ்மார்போன் எல்ஜி நிறுவனத்தின் ஷோரூம்கள், மல்டி ப்ராண்ட் ஷோரூம்கள் மற்றும் மார்டன் ஸ்டோர்ஸ் ஆகிய இடங்களில் கிடைக்கும்.
webdunia
FILE

எல்ஜி நெக்சஸ் 4 -இன் சிறப்பு அம்சங்கள்:

CPU Qualcomm SnapdragonTM S4 Pro CPU 1.5 GHz Krait

Dimension 133.9 x 68.7 x 9.1 mm

Android 4.2 .2 OS

Display Type LCD/True HD IPS+

Size 4.7” diagonal

Resolution WXGA (1280 x 768) pixel resolution (320ppi)

Etc Corning® Gorilla® Glass 2

Type/Handwriting Zerogap

Main Camera 8MP

Flash LED 1EA

Front Camera 1.3MP HD

Capacity/Type 2,100mAh/Lipolymer Battery

Bluetooth/USB/WiFI, 3.0/2.0HS/802.11 a/b/g/n (Dual Band)

Internal RAM 2GB

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil