Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த விலையில் கார்பன் ஏ-8 ஆண்ட்ராய்ட் மொபைல்

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2013 (15:15 IST)
FILE
கார்பன் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையில் ஏ-8 என்ற ஸ்மார்ட்போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சஹோலிக் ( Saholic) வர்த்தக இணைய தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. முன்புறமாக வீடியோ அழைப்புகளுக்கு 0.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது.

இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.

எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத், ஜி.பி.எஸ்., 512 எம். பி. ராம் மெமரி, 4 ஜிபி உள் நினைவகம், 32 ஜிபி வரை இதனை அதிகப்படுத்தும் வசதி ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள்.
FILE

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,189.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments