Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 1.... உலகத்தை முட்டாளாக்கிய கூகுள்

ஏப்ரல் 1.... உலகத்தை முட்டாளாக்கிய கூகுள்
, செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (12:07 IST)
FILE
கூகுள் இணையதளம் நேற்று ஒரு வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டது. கூகுள் நோஸ் எனும் புதிய தளத்திற்கான விளம்பரம் தான் அது. புதுமையும் செய்தியும் என்னவென்றால் தேடு டப்பாவில் நாம் எந்த பொருள அல்லது எதை குறிப்பிட்டு டைப் செய்கிறோமோ அந்த பொருளின் வாசனையை கம்ப்யூட்டர் திரையில் நுகரலாம் என்ற ஒரு விளம்பரம் தான் அது.

கூகுள் என்றாலே பரபரப்பு, புதுமை தானே, இதனை தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நபர்கள் இந்த பக்கத்திற்கு சென்று, அவர்களுக்கு விருப்பமான பொருளை தேர்வு செய்து வாசனை வருகிறதா என சோதனை செய்து பார்த்தனர். ஒரு சிலர் வாசனை வருவதாகவும், இன்னும் சிலர் ஒரு வாசனையும் வரவில்லையே என்றும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் இணையதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அறிவிக்கப்பட்டது உண்மை, அதாவது ஏப்ரல் 1. முட்டாள்கள் தினம். எல்லோரையும் முட்டாளாக்கவே இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நபர்களை கூகுள் நிறுவனம் மிகத்திறமையாக முட்டாளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil