Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதள பயன்பாடு: 2013இல் இந்தியாவுக்கு 3வது இடம்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (18:19 IST)
வரும் 2013ஆம் ஆண்டில் அதிகளவில் இணையதளம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைக்கும் என சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

‘ஃபாரஸ்டெர் ரிசர்ச ் ’ ( Forrester Researc h) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2013ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இணையதளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 45% அதிகரித்து 2.2 பில்லியனாக உயர்ந்து விடும். இதில் பிற கண்டங்களை விட ஆசியாவில் அதிகளவு வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரும் 2013இல் இணையதளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 3வது இடத்தில் இருக்கும் என்றும், சீனாவும், அமெரிக்காவும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2008 நிலவரப்பட ி, உலகம் முழுவதும் 1.5 பில்லியன் இணையதளப் பயனாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் ஆன்லைன் பாப்புலேஷன் ஃபோர்காஸ்ட்- 2008 முதல் 2013 வரை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை (2013க்குள்) 10 முதல் 20% வரை வளர்ச்சி பெறும ் ’ எனக் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments