Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் விண்டோஸ் ஃபோன் நோக்கியா லூமியா 800!

முதல் விண்டோஸ் ஃபோன் நோக்கியா லூமியா 800!
, வெள்ளி, 6 ஜனவரி 2012 (15:18 IST)
நோக்கியா படைப்புகளின் வரிசையில் தற்போது லூமியா 800, என்ற மொபைல் ஃபோன் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.லூமியா 710 மாடலின் அடுத்த பதிப்பு தான் லூமியா 800.

இது நோக்கியாவின் ஸ்மார்ட்ஃபோன் அடிப்படையிலான முதல் விண்டோஸ் ஃபோன் ஆகும்.இதன் வடிவமைப்புகள் நோக்கியா என்9 போல இருந்தாலும்,நோக்கியா டிரைவ்,நோக்கியா மேப்ஸ்,நோக்கியா மியூசிக் மற்றும் நோக்கியா ஸ்டோர் என கூடுதலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன் 7.5 மேங்கோ என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.மேலும் குவால்காம் MSM8255 சினப்டிராகன் என்ற சிப்செட் கொண்டுள்ளதால் இதன் வேகம் விரைவானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

திரை:
480x800 பிக்சல்கள்,அமோல்டு மல்டி டச் திரை வசதி கொண்டுள்ளதால்,படங்களின் துல்லியத்தன்மை தெளிவாக இருக்கும்.

பொருளின் வடிவமைப்பு:
116.5x61.2x12.1 மிமீ அகலமும், 142 கிராம் எடையும் மற்றும் சையன்,பிளாக்,மெஜந்தா ஆகிய வண்ணங்களிலும் வெளியாகியுள்ளது.

சேமிப்பகம்:
16 ஜிகா பைட் நினைவகம் உள்ளமைந்து காணப்படுவதால்,வெளிப்புற நினைவகத்தை பொருத்தும் அம்சம் இல்லை.

கேமரா:
8 மெகா பிக்சல் உடனும் கார்ல் சீஸ் லென்ஸ் உடனும் இருப்பதால், 3264x2448 பிக்சல் வரை படங்களை பெரியதாக்கி தெளிவாக எடுக்கலாம்.

பேட்டரி:
தனது நிறுவனத்தின் போற்றுதலுக்குரிய பேட்டரி, லித்தியம் அயனியால் உருவாக்கப்பட்டிருப்பதால்,

* ஸ்டான்ட்-பை முறையில்: 2G இயக்கத்தில் 265 மணி நேரமும் 3G இயக்கத்தில் 335 மணி நேரமும் இருக்கும்.

* பேசும் நேரங்களில்: 2G இயக்கத்தில் 13 மணி நேரமும் 3G இயக்கத்தில் 9.30 மணி நேரமும் இருக்கும்.

* இசை இயக்கத்தில்: 55 மணி நேரமும் இதன் நிலைப்புதன்மை இருக்கும்.

மேலும் 3D கிராஃபிக்ஸ், ஜிபிஆர்எஸ், எட்ஜ் வசதியும் கொண்டுள்ளது. நோக்கியா சீ ரே எனவும் இதனை கூறுகிறார்கள்.

இதன் அம்சங்கள் ஒரு பார்வை:

நோக்கியா டிரைவ்:
குரல் வழிகாட்டுதலின் மூலம் காரை இயக்கும் விதம்,வரைபடம் புதுப்பிப்பு மற்றும் அதன் தோற்றத்தை மாற்றியமைப்பதும் இதில் எளிது.

நோக்கியா மேப்ஸ்:
உங்கள் இருப்பிடத்தை GPS, A-GPS, Wi-Fi அல்லது செல்லுலார் பொசிஷனிங் மூலம் சுலபமாக நோக்கியா மேப்பில் கண்டறிய முடியும்.

நோக்கியா மியூசிக்:
FM ரேடியோ, மியூசிக் பிளேயர், ஆடியோ ஸ்டிரீமிங், ப்ளூடூத் ஸ்டிரீயோ, ஹேண்ட்ஸ்ஃபிரீ ஸ்பீக்கர், ஆடியோ ரெக்கார்டிங் போன்ற அனைத்து வசதிகள் மட்டுமின்றி எல்லா வடிவமைப்புகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஸ்டோர்:

நோக்கியாவின் சமீபத்திய தயாரிப்புகள்,பயன்பாடுகளைக் கொண்டிருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil