Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்வேர்டை டைப் செய்யவேண்டாம், நினைத்தாலே போதும்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2013 (17:07 IST)
FILE
இணையதளத்தில் இருக்கும் நமது அக்கவுண்டுகளை பாதுகாப்பாக வைக்க பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது, மற்றவருக்கு வெறும் ***** ஆக தெரியும் இந்த பாஸ்வேர்ட் பல முக்கிய விவகாரங்களை பாதுகாக்க பயன்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் தற்போது பாஸ்வேர்டுக்கும் வழி வந்துவிட்டது.

யு.சி.பெர்க்லி ஸ்கூல் ( UC Berkeley school of information) என்ற ஆராய்ச்சி மையம், பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன் மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும் என்று கூறுகிறது.

இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள ்electroencephalograms (EEGs), புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.

சமீபகாலமாக, ஆராய்ச்சிகளில் பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். மற்ற உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது. ஆனால் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது இம்முறையின் சிறப்புகள் என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments