Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிசு விழுந்ததாக வரும்‌ ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல்களை ந‌ம்ப வே‌ண்டா‌ம்

Webdunia
புதன், 18 பிப்ரவரி 2009 (11:52 IST)
பரிசு வ ிழ ுந்ததாக வரும் போலி ‌ மி‌ன்ன‌ஞ்‌ச‌ல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌ர் ஜாங்கிட் பொதும‌க்களு‌க்கு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

கட‌ந்த வார‌ம், சென்னை அருகே உள்ள முடிச்சூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ராபின் சுரேந்திராஜ ், த‌ன்கு பரிசு விழுந்ததாக வ‌ந்த போ‌லி ‌மி‌ன்ன‌ஞ்சலை நம்பி ரூ.60 ஆயிரத்தை கட்டி ஏமா‌ந்தா‌ர். இ‌ந்த ஏமா‌ற்ற‌த்‌தினை தா‌ங்‌கி‌க் கொ‌ள்ள முடியா த ராபின் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், இதுபோ‌ன்ற ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல்களை ந‌ம்‌பி ஏராளமானோ‌ர் பண‌ம் ‌க‌ட்டி ஏமா‌‌ந்ததாக புறநகர் காவ‌ல்துற ை ஆணைய‌ர ் ஜாங்கிட்டிடம் புகா‌ர் அ‌ளி‌த்தன‌ர்.

இது பற்றி பரங்கிமலை சைபர் கிரைம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்த ஜாங்கிட் உத்தரவிட்டார். சைபர் கிரைம் உதவி ஆணைய‌ர ் ‌ வ ீரபெருமாள் தலைமையில் காவ‌ல்துறை‌யின‌ர ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புறநகர் காவ‌ல்துற ை ஆணைய‌ க‌ம ் வெளியிட்டு உள்ள அறிக்கைய ி‌ல், பிரபல வங்கிகளின் பெயரில் தகவல்களை சரி செய்வதாக கூறி, வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்களை கேட்டு வரும் இ-மெயில்களுக்கு பதில் கூற வேண்டாம். இதை வைத்து நெட்-பேங்கிங் மூலம் உங்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து விடுவார்கள். 48 மணி நேரத்தில் உரிய தகவல் தர ாவிட்டால் நெட்-பேங்கிங் நிறுத்தப்படும் என வரும் ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல்களை நம்பி தகவல்களை தரவேண்டாம். எ‌ந்த வ‌ங்‌கியு‌ம் வாடிக்கையாளர்களுக்கு இத ுபோ‌ன்ற ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல்களை அனுப்புவது கிடையாது.

லண்டன் லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு விழுந்து உள்ளது. இதை அனுப்ப வரியினங்களை கட்ட பணத்தை செலுத்துங்கள் என தகவல் வந்தால் அதை நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். வெளிநாட்டில் வேலை; விசா பெற பணம் அனுப்புங்கள் என வரும் ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல்கள ையும் நம்ப வேண்டாம். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது பற்றி ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல்க‌ள ் வந்தால் உடனே காவ‌ல்துறை‌க்க ு தகவல் தரலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments