Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் பிளாக்பெரி ஸ்மார்ட்போன்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2013 (15:17 IST)
பிளாக்பெரி நிறுவனம் தனது பிளாக்பெரி 9720 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் ஆகும்.
FILE

QWERTY கீ போர்ட் கொண்டு, பிளாக்பெரி ஓ.எஸ்.7.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. 806 MHz திறன் கொண்ட ப்ராசசர் இந்த போனை இயக்குகிறது.

இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டு, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு இயங்குகிறது. இதன் தடிமன் 12 மிமீ. எடை 120 கிராம். பல பார்மட்களில் ஆடியோ மற்றும் வீடியோவினை இயக்கலாம்.
FILE

3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம்.ரேடியோ, 512 எம்பி ராம் மெமரி, அதே அளவில் ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதனை அதிகப்படுத்தும் வசதி, வைஃபை, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும்.

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிளாக்பெரி மாடல் போனின் அதிக பட்ச விலையாக ரூ. 15,990 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments