Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லை, நாகர்கோயிலில் கூகுள், வெப்துனியா!

நெல்லை, நாகர்கோயிலில் கூகுள், வெப்துனியா!
, ஞாயிறு, 15 மார்ச் 2009 (12:46 IST)
இணையத்தளத்தின் பயன்களை பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடேயே அறியப்படுத்தும் கூகுள் இணையப் பேருந்திற்கு நெல்லை, நாகர்கோயிலில் நல்ல வரவேற்பு இருந்தது.

நெல்லையின் புறநகர் பகுதியில் உள்ள ஐ.ஐ.பி.இ. லக்ஷ்மிராமன் மேனிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை கூகுள் பேருந்து வருகை தந்தது. அப்பள்ளியில் பயிலும் 9வது வகுப்பு மாணாக்கர்கள் வரை அனைத்து வகுப்பு மாணாக்கர்களும் கூகுள் பேருந்திற்கு வந்து இணையத்தின் பயன்பாட்டை அறிந்தனர்.

webdunia photoWD

கூகுள் பேருந்தைப் பார்த்து முடித்ததும், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் பந்தலிற்கு மாணாக்கர்கள் வருகை புரிந்து, தமிழ் மொழியில் இணையத்தின் பயன்பாடு எந்த அளவி்ற்கு உள்ளது என்பதையும், அது தங்களின் கல்விக்கு எந்த அளவிற்கு பயனுள்ளது என்பதையும் புரிந்துகொண்டனர்.

எமது இணையத் தளத்தை ஆர்வத்துடன் அறிந்துகொள்ள முன்வந்த மாணாக்கர்களிடம், அது அளிக்கும் சிறப்பான சேவைகளான மின்னஞ்சல், மைவெப்துனியா, வினாடி வினா ஆகியவற்றை துணை ஆசிரியர்கள் முத்துக் குமார், இராஜசேகர் ஆகியோர் விளக்கினர்.

இன்று காலை கூகுள் பேருந்து நாகர்கோயில் சென்றது. அங்கு வெற்றுனிமடம் என்ற இடத்திலுள்ள சி.எஸ்.ஐ. மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிக்குச் சென்றது. 400க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணாக்கர்கள் கூகுள் பேருந்திற்கும், தமிழ்.வெப்துனியா.காம் பந்தலிற்கும் விஜயம் செய்தனர்.

webdunia
webdunia photoWD

எமது இணையத்தளத்தின் துணை ஆசிரியர்கள் வெங்கட சேது, முத்துக்குமார், இராஜசேகர் ஆகியோர் இணையத்தை பயன்படுத்துவது குறித்தும், அதன் கல்விப் பயன்பாடு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர்.

தமிழ்.வெப்துனியா.காம் அளிக்கும் சேவைகளை விளக்கிடும் கைப்பிரதிகள் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது.

நே‌ற்று மாலை நாகர்கோயிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கிற்கு கூகுள் பேருந்து சென்றது. அங்கு பொதுமக்களுக்கு இணையத்தின் பயன்பாட்டை கூகுளும், வெப்துனியாவும் விளக்குகின்றன.

படங்கள் : சீனி

Share this Story:

Follow Webdunia tamil