Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனி எக்ஸ்பீரியா எம் டூயல் சிம் ஸ்மார்போன் இந்தியாவில் அறிமுகம்

சோனி எக்ஸ்பீரியா எம் டூயல் சிம் ஸ்மார்போன் இந்தியாவில் அறிமுகம்
, வியாழன், 10 அக்டோபர் 2013 (19:46 IST)
சோனி நிறுவனம் இரண்டு சிம் பயன்பாடு கொண்ட சோனி எக்ஸ்பீரியா எம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
FILE

முதலில் ஒரு சிம் பயன்பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற மொபைல் போனை ரூ.12,990 விலையிட்டுக் கொண்டு வந்த சோனி நிறுவனம், தற்போது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போனை ரூ.14,990 என விலையிட்டுள்ளது. தற்போது இதனை ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

சிம் இயக்கத்தினைத் தவிர மற்ற அனைத்தும் ஒரே மாதிரியான அம்சங்களையே இந்த இரண்டு போன்களும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் திரை 4 அங்குல அகலம் கொண்டு 800 X 480 பிக்ஸெல்கள் கொண்ட காட்சித் தோற்றத்தினைத் தருகிறது. இந்த திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திறன் கொண்டது. இவற்றில், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் எம்.எஸ்.எம். 8227 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவற்றை இயக்குகிறது.

பின்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த வீடியோ பதியும் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமராவும், முன்புறமாக வீடியோ அழைப்புகளுக்கென 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. இவற்றின் தடிமன் 9.3 மிமீ. எடை 115 கிராம்.
webdunia
FILE

எப்.எம். ரேடியோ கீஈகு தொழில் நுட்பத்துடன் இயங்குகிறது. 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வைஃபை, DLNA, A2DP இணைந்த புளுடூத் 4, 1ஜிபி ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1750 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த போன்கள் கிடைக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil