Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன செ‌ல்பே‌சி இணைப்பு ரத்தாகிறது

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2009 (12:37 IST)
சர்வதேச அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ.) இல்லாத சீன செல்போன்களுக்கு வரும் 15ம் தேதியிலிருந்து இணைப்பு ரத்து செய்யப்படுகிறது. இதனால் 2.5 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

நோக்கியா, சாம்சங் போன்ற ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல ்பே‌சிக‌ளி‌ல ், 15 இலக்கம் கொண்ட சர்வதேச அடையாள எண் இருக்கும். ஒருவரது செல்போன் திருடுபோனால், அதை மற்றவர்கள் உபயோகிக்காமல் தடுக் கவு‌ம், இ‌ந்த எ‌ண்ணை‌க் கொ‌ண்டு, அ‌ந்த செ‌ல்பே‌சி‌யி‌ல் இரு‌ந்து எ‌‌ப்போதெ‌ல்லா‌ம் எ‌ந்தெ‌ந்த எ‌ண்களு‌க்கு தொட‌ர்பு கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்பதையு‌ம் அ‌றிய முடியு‌ம்.

ஆனால், விலை மலிவான சீன மற்றும் கொரிய செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. அடையாள எண் இல்லை. இதனால் தீவிரவாதிகள் சதித் திட்டங்களுக்கு இந்த செல்போன்களையே உபயோகிக்கின்றனர்.

இதனால், சீன மற்றும் கொரிய செல்போன்களுக்கு இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் செல ்பே‌சி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் உத்தரவு வெளியிடப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி வரையில் கெடு விதிக்கப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு மேல் கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது.

இதனால் வரும் 15ம் தேதியில் இருந்து ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல ்பே‌ச ிகளுக்கு இணைப்பு ரத்தாகும். இந்த 2.5 கோடி செல ்பே‌சிக‌ள் ஜி.எஸ்.எம். அலைவரிசையில் இயங்கும் மொத்த செல ்பே‌ச ிகளில் 10 ‌ விழு‌க்காடு ஆகு‌ம்.

இணைப்பு ரத்து தொடர்பாக பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்து வருகின்றன. உடனடியாக செ‌ல்பே‌சிய ை மாற்றும்படி கூறி வருகின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments