Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் நோட்ப்ரோ; உலகின் பெரிய கைக்கணினி

Webdunia
புதன், 8 ஜனவரி 2014 (18:00 IST)
பெரிய தொடுதிரை கொண்ட சாம்சங் காலக்ஸி நோட்ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக எலெக்ட்ரானிக் திருவிழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சாம்சங் நிறுவனம் உலகிலேயே பெரிய திரையை கொண்ட 12.5 இன்ச் “நோட்ப்ரோ” எனப்படும் கைக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.
FILE


இந்த நோட்ப்ரோ இரண்டு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று வைஃபை மூலம் இயங்கும் வகையிலும் மற்றொன்று 4ஜி மூலம் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4 மில்லியன்களுக்கும் அதிகமான பிக்ஸல்களைக் கொண்ட 2560 x 1600 ஸ்கிரீன் அளவைக் கொண்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் பின்புற கேமிராவும், 10 நாட்கள் நீடிக்கக் கூடிய 9500 mAh பேட்டரியும் உள்ளது. ஈதனுடைய எடை 750 கிராம்.

ஆன்டிராய்ட் கிட்கேட் துணையுடன் இந்த கைகணினி இயங்குகிறது. ஆனால் இதன் உள்முகம் மறுசீரமைக்கப்பட்டு முந்தைய ஆன்டிராய்டு ஸ்கிரீன் மாற்றப்பட்டு புதிய எண்ணற்ற ஸ்கிரீன்களை ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சிறிய மடிக்கணினி போலவும் பயன்படுத்தலாம். இதன் ஸ்கிரீனை மடிக்கணினியில் செய்வது போல நான்காக பிரிக்கலாம். இதனுடன் கூடுதல் இணைப்பாக ஒரு மவுஸ்( mouse), கிபோர்ட் ( wireless keyboard) உள்ளது.

சாம்சங் நோட்ப்ரோவின் சிறப்பம்சங்கள்

அளவு: 295.6 x 204 x 7095mm

எடை: 759 g ( ஒய்-ஃபை வெர்ஸன்), 759 g (3 ஜி/எல்டீஈ வெர்ஸன்)

ஆன்டிராய்ட் 4.4 (kitkat)

12.2 இஞ்ச் எல்சிடி ஸ்கிரீன்

2.3 GHz குவாட்-கோர் ஸ்னேப்ட்ராகன் 800 Processor(LTE வெர்ஸன்)

1.9 GHz எக்ஸினொச் 5 ஆக்டா ப்ராசசர் (3 G வெர்ஸன்)

3 GB RAM

32 /64GB ஸ்டோரேஜ்

64 GB மைச்ரோ எச்டி சப்போர்ட்

LED ஃப்லேஷுடன் கூடிய 8 Mega picxal கேமரா.

வை-ஃபை 802.11 ஏ/பி/ஜி/என்/ஏசி மிமோ( MIMO) தொழில்நுட்பம்.

ப்லூடூத் 4.0

யுஎஸ்பி 3.0

9500 mAh பேட்டரி.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments