Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டியூவல் இ455 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Webdunia
வியாழன், 6 ஜூன் 2013 (17:14 IST)
FILE
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய 3ஜி மொபைல் போன் எல்ஜி இ455 (ஆப்டிமஸ் எல்5) இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது. சென்ற வருடம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த போன் தற்போது விற்பனையில் உள்ளது.

ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.1.2 சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு சிம்களைக் கையாளக் கூடியது. இதன் பரிமாணம் 118.4 X 62.2 X 9.2 மிமீ, எடை 100 கிராம் மற்றும் எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டது.

மல்ட்டி டச் வசதி, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர், டாகுமென்ட் வியூவர், அக்ஸிலரோ மீட்டர், காம்பஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியினை 32 ஜிபி வரை உயர்த்தும் வசதி, 4ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ராம் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வைபி, A2DP இணைந்த புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை இதன் சிறப்பு வசதிகளாகும்.

FILE
இதன் ப்ராசஸர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் கேமரா 5 எம்பி திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் கொண்டு செயல்படுகிறது. ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் டாக் ஆகியவற்றிற்கான நேரடி தொடர்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 1,700 mAh திறனுடன் உள்ளது.

3 ஜி ஸ்மார்ட்போன் தேடுவோருக்கு இது ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும். இதன் அதிகபட்ச விலை ரூ.11,499 ஆகும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments