Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் கலைப்பொருட்கள் இனி கூகுளில்....

இந்தியாவின் கலைப்பொருட்கள் இனி கூகுளில்....
, செவ்வாய், 10 ஏப்ரல் 2012 (19:11 IST)
இந்திய அருங்காட்சியகம் மற்றும் கலை தொகுப்புகள் இப்போது கூகுள் கலை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கூகுளின் ஆர்ட் ப்ராஜக்ட் எனப்படும் கூகுள் கலை திட்டம் தற்போது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
FILE

முதற்கட்டமாக டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் தேசிய நவீன கலை காட்சியக பொருட்கள் கணினி திரையில் அதிநுட்பத்துடன் வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம், அருங்காட்சியகத்தை உலகம் முழுவதும் உள்ளவர்கள் முழுமையாக தங்கள் கணினி திரையில் துல்லியமாக காண இயலும்.

முன்னதாக மத்திய அரசுடன் கூகுள் கைக்கோர்த்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த கலாச்சார துறை அமைச்சர் குமாரி செல்ஜா, இந்த திட்டத்தின் மூலம், நமது அருங்காட்சியக பொருட்கள், கலைகள் உலகம் முழுவதும்கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டத்தால், குழந்தைகள், ஆர்வலர்கள் கலைகளை ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலையில் பகிர்ந்துக்கொள்ளமுடியும் என்று கூறினார்.

இந்த தொடக்கம் விரைவில் இந்திய மொழிகளில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News Summary:
Artworks from the National Museum and the National Gallery of Modern Art would now be accessible at the touch of a keystroke with Culture Ministry today announcing a partnership with Google, that allows people to view art and stroll through museums across the world, online.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil