நோன்பின் போது உம்மை யாரேனும் திட்டினால் அல்லது உம்மிடம் முறையற்று நடந்து கொண்டால், நிச்சயமாக நான் நோன்பாளி! நிச்சயமான நான் நோன்பாளி! என்று கூறி (ஒதுங்கி) விடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னு குசைமா
எத்தனையோ நோன்பாளிகளுக்கு (அவர்கள் உணர்ந்த) பசியையும் தாகத்தையும தவிர வேறு எந்த கூலியும் நோன்பிற்காகக் கிடைக்காது. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத்
அல்லாஹ் கூறுகிற ார ் :
ஈமான் கொண்டாரோ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவராகலாம். அல்குர்ஆன் : 2:183
எனவே உங்களில் எவர் அம்மாதத்தை - ரமலானை -பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்று விடவும். எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் ( ஏற்கனவே விடுபட்ட நோன்பினை கணக்கிட்டு நோன்பு நோற்றுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். மேலும் அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை. அல்குர்ஆன் : 2:185