முஸ்லிம்களின் 5 கடமைகளான கலிம ா தொழுகை நோன்ப ு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ். இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கி ய கடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தல் கடம ை பெற்றுள்ளது.
ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலம ் முஸ்லிம்களின் வசந் த காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமலானின ் மகத்துவத்தில் நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.
முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களில ் ரமலான் மாதத்திற்குதான் சிறப்பு தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலர ் தெரிவித்துள்ளனர்.
ஈதுல் பித்ர் என அழைக்கப்படும் ஈகைத ் திருநாள், ரமலான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுகிறது.
webdunia photo
FILE
ரமலான் வந்துவிட்டால ், ஒருவருக்க ு ஒருவர் உதவி செய்தல் என்பதும ், இல்லாதோருக்கு இருப்போர் உதவி செய்தல் என்பதும ் அதிகரித்துவிடும்.
ரமலான் நோன்பு இருப்பவர்கள் முதல் பிற ை கண் ட பின்னர ் தான் தங்களது நோன்பை (விரதமிருத்தலை) தொடங்குகின்றனர்.
நோன்பு இருக்கும் 30 நாட்களும் சூரியன ் உதிப்பதற்கு முன்பாக எழுந்து உணவு உண்ண வேண்டும். இந்த நேரத்தை சஹர் உடைய நேரம ் என்று அழைக்கின்றனர்.
சூரியன் உதிக்கும் முன்பாக உணவு எடுத் த பின்னர ், சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட பருகக் கூடாது. சூரியன் மறைந்த பின்னர ே நோன்பு திறக்க வேண்டும்.
நோன்பு திறத்தலை இப்தார் என்ற ு அழைக்கின்றனர். நோன்பு திறக்கும்போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தம ன நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். தாமதம் கூடாது என்ற ு வலியுறுத்தப்படுகிறது.
ஊர்விட்டு ஊர் செல்லும் பயணிகள ், நோயாளிகளை தவிர அனைவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. 7 வயத ு குழந்தைகளுக்கும் நோன்பு பிடிப்பதற்கு அனுமதி உண்டு. சிறுவர் - சிறுமிகள ் நோன்பின்போது சோர்வடைந்தால ், அந்த நேரத்தில் அவர்கள் நோன்பை திறந்து கொள்ளலாம். இதற்கு அவர்களது பெற்றோர்களின் கவனம் அதிகம் தேவை.
மாதவிடாய் காலங்களைத் தவிர மற்ற நாட்களில ் பெண்கள் நோன்பு இருப்பது கடமையாகும். நோன்பு இருக்கும் நேரத்தில் ஐங்கால தொழுகைய ை நிறைவேற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
சுபுஹீ எனப்படும் அதிகாலை தொழுகைக்க ு முன்பு நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள ், மஹ்ரிப் எனப்படும் மாலை நேர தொழுகைக்க ு முன்பாக நோன்பு திறப்பது வழக்கம். சூரியன் அஸ்தமனம் மற்றும் உதய நேரங்களை கணக்கில ் கொண்டு இந்த 2 நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படுகின்றது.
நோன்பு இருப்பவர்கள் ஐம்புலன்களையும ் அடக்கி ஆள வேண்டும். புறம் பேசுதல ், பொய் சொல்லுதல ், பிறருக்கு துன்பம ் விளைவித்தல ், பிறர் மணம் புண்படுமாறு பேசுதல் கூடாது.
நோன்பு இருக்கும் நேரத்தில் தவறா ன வார்த்தைகளையோ, தவறான செயல்களையோ பயன்படுத்தினால் நோன்ப ு முறிந்துவிடும்.
நோன்பு இருப்பதன் மூலம ் உடலின்அனைத்து பாகங்களும் ஓய்வெடுக்கின்றன. குறிப்பாக குடல் எனப்படும் வயிற்றின் முக்கிய உறுப்புக்கள், ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து மனிதன ் காக்கப்படுகின்றான்.
வருடம் ஒன்றின் 365 நாட்களும் உணவ ு அரைபொருள் நிலையமாக திகழும் மனிதனின் உடல், நோன்பு எனப்படும் 30 நாள் விரதத்தால ், ஓய்வு பெறுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது.
நோன்பு காலங்களில் நடைபெறும் இரவ ு தொழுகைக்கு பெயர் தராவீஹ் ஆகும். நோன்பு இருப்பவர்கள் இஷா எனப்படும் இரவ ு தொழுகைக்கு பின்னர் தராவீஹ் தொழுகை மேற்கொள்ள வேண்டும்.
ரமலான் மாதத்தில்தான் இறைவனின் இறுதித ் தூதரான முகம்மது நபி மீது குர் ஆன் வசனம் இறக்கி வைக்கப்பட்டது.
30 பாகங்களைக் கொண்ட குர்ஆனின் அத்தியாயங்கள ் அனைத்தும் ஒவ்வொரு இரவு தராவீஹ் தொழுகையின்போது ஓதப்படும்.
ரமலான் மாதத்தில் குர்ஆன் ஓதுபவர்களுக்க ு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என முஸ்லிம் சான்றோர்கள ் கூறியுள்ளனர்.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானுக்கு ப ல சிறப்புகள் உண்டு. இந்த மாதத்தில் தானம், தர்மம் அதிக அளவில் செய் ய வேண்டும்.
இல்லாதோருக்கு இருப்போர் உதவ வேண்டும். நோன்பு பிடித்துக் கொண்டு மனோ இச்சைப்படி நடப்பத ோ, பாவங்களில் ஈடுபடுவதோ மிகப்பெரி ய குற்றமாகும். நோன்பு இருப்பவர்களையும் பழித்து பேசக்கூடாது.
நோன்பு வைத்துள்ள ஒருவருடன் அவரைப் பற்ற ி தெரியாத நபர்கள் எவரேனும் சண்டையிடவோ, தர்க்கம் செய்யவோ முற்பட்டால் நான் ஒர ு நோன்பாளி என முன்னதாகவே கூறி அந்த சூழ்நிலையில் இருந்து விலகிக் கொள் ள வேண்டும்.
நோன்பிருக்கும் காலங்களில் நன்மைகள ் செய்து தீமைகளை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோன்பு திறப்பதற்கு தண்ணீர் அல்லத ு பேரிச்சம் பழத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோன்பு திறப்பதற்காக ஒவ்வொர ு மசூதிகளிலும ், அவர்களின் வசதிக்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்படும். நோன்ப ு திறப்பவர்களுக்காக அரிசி கஞ்சி விநியோகிக்கப்படும்.
ரமலான் மாதம் நன்மையை மட்டும ் போதிக்கவில்லை. ஒற்றுமையையும் போதிக்கிறது. 30 நாட்கள் நோன்பிருந்து, அதன் முடிவில் ஈதுல ் பித்ர் எனப்படும் ஈகை திருநாள் ரம்ஜான் பெருநாளா க கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் புத்தாடை அணிந்த ு தொழுகைக்குச் செல்ல வேண்டும். ரம்ஜான் நாளன்று நோன்பு இருப்பது கூடாது. 30 நாட்களில் விட்ட நோன்புகளை ரம்ஜான் பெருநாளுக்குப் பின்னர் வரும் முதல் 6 நாட்களில ் மீண்டும் இருந்து கொள்ளலாம்.
webdunia photo
WD
ஆக மனிதனை புனிதனாக்கும் மாதம்தான ் ரமலான் மாதம். இந்த மாதம் இதோ வந்துவிட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ரமலான் மூலம ் நன்மைகள் செய்வதற்கும் தயாராகி விட்டனர்.
இந்த புனித மாதத்தில் அடியெடுத்த ு வைத்துள்ள இஸ்லாமிய நண்பர்களுக்கும ், குடும்பத்தினருக்கும் வாழ்த்துக் கள ை காணிக்கையாக்குவோம்.