Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (14:26 IST)
வழக்கம்போல ஒரு கிராமத்தில் மக்களுக்கு அறிவுரைகளை வழங்க ி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர் சூஃபி ஞானி. அவர்களில் ஒரு பெண்மணி மிகவும் சோகமாக காணப்பட்டாள். அவளை கவனித்த ஞானி அவளுக்கு என்ன வருத்தம் என்று கேட்டார். என் கணவர் கொஞ்சமும் தன்னம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். மரணத்துக்கு பயப்படுகிறார் என்று சொல்லி வருத்தப்பட்டாள்.

அந்தக் கணவரை திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தார் ஞானி. அவரை தன் இருப்பிடத்துக்கு வரச் சொன்னார். நிறைய உணவு வகைகளை கொடுத்து சாப்பிட வைத்தார். அடுத்து சிறிது நேரத்தில் உண்ட மயக்கத்தில் அவர் சற்றே கண்ணயர விரும்பினார். உடனே ஒரு கட்டிலை காட்டி அதில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு உபசரித்தார் ஞானி.

ஐயோ, கட்டிலா என்று பதறினார் கணவர். கட்டிலில் படுத்தபடிதான் என் கொள்ளு தாத்தா இறந்தார். என் தாத்தாவும் அதேபோல கட்டிலில்தான் மரணமடைந்தார். ஏன், என் தந்தையும் அப்படித்தான். அதனால் நான் கட்டிலில் படுக்க மாட்டேன். தரையில் படுத்துக் கொள்கிற ே‌ன ் என்றான் அவன்.

ஐயையோ, தரையில் படுக்காதீர்கள், எ‌ன்ற ு இப்போது ஞானி பதறினார்.

தரையில் படுத்தபடிதான் என் கொள்ளு தாத்தா இறந்தார், என் தாத்தாவும் அப்படித்தான் மரணமடைந்தார்; ஏன் என் தந்தையாரும் தரையில் படுத்திருந்த போதுதான் சாவைக் கண்டார். அதனால் தரையில் படுக்காதீர்கள்... அவன் விழித்தான். இறப்பை யாராலும் தவிர்க்க முடியாது. கட்டிலிலோ, தரையிலோ எங்கு படுத்தாலும் சரி, மரணம் வந்தால் அதை மறுத்து விரட்ட முடியாது.

கட்டில், தரை என்றில்லை, அது எங்கும், எப்போதும், எப்படியும் நிகழலாம். ஆகவே அதற்காக பயப்படுவதை விட்டு, இருக்கும் வாழ்க்கையை உற்சாகமாக வாழப் பழகிக்கொள். அதனால் நீயும் உன் குடும்பத்தாரும், பிற எல்லோரும் சந்தோஷமடைவீர்கள் என்றார், ஞானி.

அவனுக்கு இப்போது தூக்கம் வரவில்லை; விழித்துக் கொண்டான்.

ம‌னித வா‌ழ்‌வி‌ற்கு த‌ன்ன‌ம்‌பி‌க்கையே ஆதார‌ம் எ‌ன்று இத‌ன் மூல‌ம் ‌விள‌க்‌கினா‌ர் ஞா‌னி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – தனுசு

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – விருச்சிகம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – துலாம்

இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதம், முன்கோபம் தவிர்ப்பது நல்லது! இன்றைய ராசி பலன்கள் (31.07.2025)!

துறவு பூண்ட பட்டினத்தார்: சகோதரிக்கு ஏற்பட்ட கர்ம வினை - வாழை மட்டையால் தாய்க்கு ஈமக்கடன் - பட்டினத்தாரின் சக்திகள்..!

Show comments