Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குர் ஆனில் பத்து கட்டளைக‌ள்

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (13:02 IST)
இ‌ஸ்லா‌மியராக‌ப் ‌பிற‌ந்த ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் கு‌ர்ஆ‌னி‌ல் ப‌த்து க‌ட்டளைக‌ள் ‌க‌ற்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
அத‌ன்படி வா‌ழ்‌ந்து கா‌ட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்பதே கு‌ர் ஆ‌ன் இ‌ஸ்லா‌மியரு‌க்கு‌க் கூறு‌ம் வ‌ழியாகு‌ம்.
‌ திரு‌க் கு‌ர் ஆ‌னி‌ல் வசனம் 6:151,152 முன்வந்த வேதங்களில் வரும் பத்து கட்டளைகளை பின் வருமாறு உறுதிப்படுத்துகிறது

1. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது.
2. பெற்றோருக்கு உதவுங்கள்.
3. வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.
4. வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும்
நெருங்காதீர்கள்.
5. அல்லாஹ் தடைசெய்துள்ள எவரையும் உரிமையிருந்தாலே தவிர கொல்லாதீர்கள்.
நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதையே உங்களுக்கு உபதேசம் செய்கிறான். 6:151

6. அநாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை நியாயமான முறையிலே அன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள்.
7. அளவையும், நிறுவையையும், நே‌ர்மையாக நிறைவேற்றுங்கள்.
8. எவரையும் அவரது சக்திக்கு மேல் நாம் சிரமப்படுத்துவதில்லை.
9. உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்.
10. அல்லாஹ்வின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். 6:152.

இதுவே எனது நேரான வழியாகும். ‌நீ‌ங்களு‌ம் இதனையே பின்பற்றுங்கள். பலவழிகளைப் பின்பற்றாதீர்கள்.அவை அவனது (ஒரே) வழியைவிட்டும் உங்களைப் பிரித்துவிடும்.

நீங்கள்(இறைவனை)அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – தனுசு

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – விருச்சிகம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – துலாம்

இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதம், முன்கோபம் தவிர்ப்பது நல்லது! இன்றைய ராசி பலன்கள் (31.07.2025)!

துறவு பூண்ட பட்டினத்தார்: சகோதரிக்கு ஏற்பட்ட கர்ம வினை - வாழை மட்டையால் தாய்க்கு ஈமக்கடன் - பட்டினத்தாரின் சக்திகள்..!

Show comments