Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது இடத்திற்கு முன்னேறியது மும்பை: பிளே ஆஃப் சுற்றுக்கு அதிக வாய்ப்பு!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (08:00 IST)
ஐபிஎல் தொடர் போட்டியில் நேற்று 51வது போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் மும்பை அணி ராஜஸ்தான் கொடுத்த 91 என்ற இலக்கை எட்டே ஓவர்களில் எட்டிவிட்டதால் ரன்ரேட் எகிறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த 91 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் காரணமாக மும்பை அணியின் ரன் ரேட் எதிரி உள்ளது என்பதும் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மும்பை அணி ஐதராபாத் அணியுடன் விளையாட உள்ளதால் அந்த அணியுடனான போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மும்பை பிளே ஆப் சுற்றில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments