Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: சென்னை வெற்றி - ஆசிஷ் நெஹ்ராவை பாராட்டிய தோனி

ஐபிஎல்: சென்னை வெற்றி - ஆசிஷ் நெஹ்ராவை பாராட்டிய தோனி
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (12:05 IST)
நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆசிஷ் நெஹ்ரா அபாரமாக பந்து வீசியதற்கு கேப்டன் தோனி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இதில் சென்னை அணி 181 ரன்களை எடுத்தது. பின்னர் தங்களது இன்னிங்சை தொடங்கிய பெங்களூர் அணி வெறும் 154 ரன்களே எடுத்தது. எனவே சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. களத்தில் சென்னை வீரர் ஆசிஷ் நெஹ்ராவின் பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. அவர் 10 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 
இதுகுறித்து கேப்டன் தோனி கூறுகையில், ஆட்டத்தில் டி வில்லியர்சின் ரன் அவுட் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா மிகவும் அற்புதமாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அடுத்து வரும் 25 ஆம் தேதி சென்னை அணி பஞ்சாப்பை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil