Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்கல்லம் வெற்றிடத்தை ரெய்னா நிறப்புவார் - பிளமிங்

Webdunia
செவ்வாய், 19 மே 2015 (12:28 IST)
இன்று நடைபெறும் பிளே ஆப் சுற்றுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது. இதில் இன்று நடைபெறும் பிளேஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
 
இதில் சென்னை அணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அணியில் தொடக்க வீரர் மெக்கல்லமிற்கு மாறாக ஹஸ்சி கலந்து கொள்வார். இரு அணிகளும் சமபலம் பெற்ற அணிகள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
இந்நிலையில் போட்டி குறித்து சென்னையின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில், அணியில் மெக்கல்லம் இல்லாதது பெரும் விளைவை ஏற்படுத்தும். எனினும் அவரின் வெற்றிடத்தை புதுமாப்பிள்ளை ரெய்னா பூர்த்தி செய்வார் என நம்புகிறேன் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

Show comments