Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் பலப்பரிட்சை

ஐபிஎல்:  ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் பலப்பரிட்சை
, ஞாயிறு, 3 மே 2015 (13:28 IST)
இன்று நடைபெறும் 2 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிச்சை நடத்தவுள்ளன.
 
8 ஆவது ஐபிஎல் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மும்பையில் நடக்கவுள்ள இப்போட்டியில்  ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,  டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் களத்தில் மோத காத்துகொண்டிருக்கின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரகானே, பின்னி, ஸ்மித் ஆகிய வீரர்கள் டெல்லி அணியை களங்கடிக்க காத்துகொண்டிருக்கின்றனர். இத்தொடர் தொடக்கத்தில் வரிசையாக வெற்றிகளை சுவைத்த இவ்வணி கடைசியாக கண்ட தோல்விகளால் துவண்டு போய் உள்ளது. நடப்பு தொடரில் இவ்வணி 5 வெற்றிகளை ருசித்துள்ளது. 
 
டெல்லி அணியில் மயங் அகர்வால், ஜாகீர்கான், நாதன் கவுல்டர் போன்ற வீரர்கள் அணிக்கு வலுசேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் சரிவில் இருந்து மீள டெல்லி அணி முயற்சிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நடப்பு தொடரில் இவ்வணி 4 வெற்றி 4 தோல்விகளை சந்தித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil