Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை, ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டு தடை

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2016 (15:01 IST)
ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ஹிகென் ஷா-வுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


 

 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் அஜித் சண்டிலா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகமீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ரஞ்சி கிரிக்கெட் வீரரான ஹிகென் ஷா, சூதாட்டம் தொடர்பாக பிற வீரர்களை அணுகியதாக புகார் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடந்து, இவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இதை உறுதி செய்தது. பின்னர் தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ரஞ்சி கிரிக்கெட் வீரரான ஹிகென் ஷா-வுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

Show comments