Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் 8 ஆவது லீக்: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அபார வெற்றி

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2015 (10:54 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் ன் 8 ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

 


 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் (46) விராட் கோலி (41) கெய்ல் (21) அபாட் (14) என 19.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் பவுல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ் குமார், போபாரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்மா, ஆஷிஷ் ரெட்டி, பிரவீண் குமார் ஆகியோர் தலா 1 வி்க்கெட்டையும் கைப்பற்றினர். 
 
இதைத் தொடர்ந்து, களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் வார்னர் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார் (57). வில்லியம்சன் 5 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தவான் மற்றும் ராகுலின் கூட்டணியில் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. தவான் (50) ராகுல் (44) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 17.2 ஓவர்களுக்குள்ளாகவே பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
பெங்களூரு அணி தரப்பில் சாசல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments