Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: ஐதராபாத் வெற்றி: தவானுக்கு வார்னர் பாராட்டு

ஐபிஎல்: ஐதராபாத் வெற்றி: தவானுக்கு வார்னர் பாராட்டு
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (12:48 IST)
நேற்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதற்கு தவானையும், பந்துவீச்சாளர்களையும் அவ்வணியின் கேப்டன் வார்னர் புகழ்ந்துள்ளார்.
 

 
8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் மழை குறுக்கீடு காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
 
இதுகுறித்து ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறுகையில், எங்கள் அணியில் திறம்பட வீரர்கள் பலர் உள்ளனர். களத்தில் நானும் தவானும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினோம். இதுதான் ஆட்டத்தில் வலுவான தொடக்கம் ஏற்பட வலிவகுத்தது. மேலும் பந்துவீச்சாளர்கள் சரியான தருணத்தில் மிக அற்புதமாக பந்து வீசினர் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil