Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போன ஐபிஎல் 2020: நாளைய கூட்டத்தில் பிசிசிஐ எடுக்கும் முடிவு என்ன?

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (14:56 IST)
ஐபிஎல் தள்ளிவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ள நிலையில், நாளை பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. 
 
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கி மே 24 வரை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முழுவீச்சில் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.  
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஐபிஎல் போட்டிகளை காண குவியும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் ஐபில் போட்டியை ரத்து செய்யும்படி கோரப்பட்டிருந்தது. 
 
இது குறித்து முடிவெடுக்க நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. ஆம், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய செய்தியின் படி டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது. 
 
மேலும், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டியை தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் நாளை இது குறித்து  அதிகாரப்பூர்வமாக என்ன முடிவெடுக்கப்படும் என தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments