Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். 17 ஆவது லீக்: 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (09:13 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17 ஆவது லீக்  ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை  6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  வெற்றி பெற்றது. 


 

 
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா அணி டெல்லியை 146 ரன்களில் சுருட்டியது. இதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பாவும் காம்பீரும் களமிறங்கினர். 13 ரன்களே எடுத்த உத்தப்பா 4 ஆவது ஓவரிலேயே அவுட்டானார். அடுத்து வந்த பாண்டே வந்த வேகத்திலேயே திரும்பினார்.
 
பின்னர் களமிறங்கிய யாதவ் 24 ரன்கள் எடுத்தார். ஒரு புறம் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தாலும் நிலைத்து நின்று, நிதானமாக ஆடிய கேப்டன் காம்பீர் 60 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
 
அதேபோல பதானும் சிறப்பாக விளையாடி 40 ரன்கள் குவிக்க, ஆட்டம் முடிய 11 பந்துகள் மீதமிருந்த போதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 147 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
 
கொல்கத்தா அணி பெற்ற 3 ஆவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

Show comments