Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20இல் 36 வயதிலும் சிறப்பாக விளையாடுவது நம்ப முடியாதது - ஆசிஷ் நெஹ்ரா

Webdunia
சனி, 23 மே 2015 (21:14 IST)
டி-20 போட்டிகளில் 36 வயதிலும் சிறப்பாக விளையாடுவது நம்பமுடியாதது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இந்த ஐபிஎல் சீசனில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், பெங்களூருக்கு எதிரான 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
 

 
விருதை பெற்றுக்கொண்டு பேசிய ஆசிஷ் நெஹ்ரா, “நான் இந்த ஐபிஎல் சீசனில் மூன்று அல்லது நான்கு ஆட்ட நாயகன் விருது பெற்றிருக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர், ஒரு தொடர் முழுவதும் அதிக அளவிலான ஆட்ட நாயகன் விருது வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
 
நான் கடந்த சில ஆண்டுகளாக நன்றாக பந்து வீசி வருகிறேன். கடந்த ஆண்டு சென்னை அணிக்காக நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தேன். ஏனெனில், முதல் ஆட்டத்திற்கு பிறகு நிறைய அழுத்தம் இருந்தது.
 
என்னைப் போன்ற 36 வயதுடைய வீரர்களை மக்கள் கவனித்து வருகிறார்கள். என்னைப் போன்றவர்கள் டி-20 போட்டிகளில் 36 வயதிலும் சிறப்பாக விளையாடுவது நம்பமுடியாதது. ஆனால் கடந்த 10 வருடங்களாக நான் இதே போன்ற சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

Show comments