Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

Webdunia
சனி, 2 மே 2015 (10:11 IST)
நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்துள்ளது.
8 ஆவது ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. இதில் டெல்லி வீரர்களின் பந்துவீச்சு தாக்குதல் மிக அருமையாக கைகொடுத்ததால் பஞ்சாப் வீரர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.
 
இதில் தொடக்க ஆட்டக்காரர் சேவக் 1 ரன்னில் ஏமாற்றினார். ஷான் மார்ஷ், வோரா, சகா, பெய்லி,  பெரரா, அக்சர் படேல் ஆகியோர் மிக சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாட தொடங்கியது டெல்லி அணி. இதில் மயங் அகர்வால், மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
 
இதில் அய்யர் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அகர்வால் தன் பங்கிற்கு அரை சதம் அடித்தார். இறுதியில் டெல்லி அணி 13.5 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

Show comments