Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது அரை‌யிறு‌தி‌‌யில் செ‌ன்னை- டெக்கா இன்று மோதல்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2010 (12:54 IST)
இந்தியன ் பிரீமியர ் லீக ் கிரிக்கெட ் போட்டியின ் இரண்டாவத ு அரையிறுத ி ஆட்டம ் மும்பையில ் இ‌ன்ற ு இரவ ு நடைபெறுகிறத ு.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று இரவ ு 8 ம‌ணி‌க்கு‌ம ் நடக்கும் 2-வது அரைஇறுதியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் சந்திக்கின்றன. இந்த ஆட்டம் மும்பை டி.ஒய். பட்டீல் மைதான‌த்த‌ி‌ல ் நடக்கிறது.

மூன்று ஐ.பி.எல். போட்டிகளிலும் அரைஇறுதிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும். ஆனால் இந்த முறை லீக் சுற்றில் பெரும்பாடுபட்டே 7 வெற்றியுடன் இந்த சுற்றை எட்டியிருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட பட்டம் வென்றதில்லை. மகுடம் கனவை எட்ட இன்னும் 2 தடையை கடக்க வேண்டும்.

அதில் முதல் சோதனையாக, வலுவான டெக்கானை இன்று எதிர்க்கிறது. லீக் சுற்றில் டெக்கானுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் முறையே 31 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்கவும் தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சென்னை அணிக்கு பேட்டிங் தான் பலமாகும். இந்திய அணியில் இடம் கிடைத்த உற்சாகத்துடன் முரளி விஜய் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார். இதே போல் சுரேஷ் ரெய்னா, தோனி, பத்ரிநாத் உள்ளிட்டோர் பார்மில் இருக்கிறார்கள். மற்றொரு நட்சத்திர வீரர் மேத ்‌ ய ூ ௦ஹைடனின் ஆட்டம் தான் கவலை தருகிறது. இந்த ஐ.பி.எல்.-ல் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். எனவே முக்கியமான இந்த மோதலில் அவர் தனது சிறந்த பங்களிப்பை அளித்தால் சென்னை அணி மேலும் உத்வேகம் பெறும்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்த ஐ.பி.எல்-‌லில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ஆல்-ரவுண்டர்கள் அல்பி மோர்கல், கெம்ப் ஆகியோரும் கைகொடுக்கும் பட்சத்தில் சென்னை அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு சுலபமாகி விடும்.

ஆனால் நடப்பு சாம்பியன் டெக்கானை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. கூட்டுமுயற்சியுடன் செயல்படுவது டெக்கானின் பலமாகும். தொடர்ந்து 5 தோல்விகளுக்கு பிறகு, அடுத்த 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதியை எட்ட முடியும் என்ற வாழ்வா? சாவா? கட்டத்தில், எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது முத்திரையை பதித்தது.

கில்கிறிஸ்ட்டின் பேட்டிங் மெச்சும்படி இல்லாவிட்டாலும், ஆல்-ரவுண்டர் சைமண்ட்ஸ், ரோகித் ஷர்மா, சுமன் ஆகியோர் டெக்கான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். பந்து வீச்சில் ஹர்மீத்சிங், ஆர்.பி.சிங், வாஸ், பிரக்யான் ஓஜா ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் ஓஜா இந்த ஐ.பி.எல்-‌லில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி முன்னணியில் இருப்பது கவனிக்கத்தக்கது.

சென்னை அ‌ண ி ‌ வீர‌ர்க‌ள்: ஹைடன், விஜய், ரெய்னா, தோ‌னி (தலைவ‌‌‌ர்), பத்ரிநாத், அல்பி மோர்கல், கெம்ப், பாலாஜி, அஷ்வின், ஜகாதி, போலிஞ்சர்.

டெக்கான் அ‌ண ி ‌ வீர‌‌ர்‌க‌ள்: கில்கிறிஸ்ட் (தலைவ‌ர்), மனீஷ் மிஸ்ரா, சுமன், சைமண்ட்ஸ், ரோகித் ஷர்மா, மிச்செல் மார்ஷ், சுமந்த், ஹர்மீத்சிங், வாஸ், ஆர்.பி.சிங், ஓஜா.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments