Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பையை ‌வீ‌ழ்‌த்‌தியது கொ‌ல்க‌த்தா நை‌ட் ரைட‌ர்‌ஸ்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2010 (09:57 IST)
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெ‌ற்றாலு‌ம ் ரன் விகிதாச்சார அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

3 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்ட ி‌ யி‌ன ் கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நே‌ற்‌றிரவ ு நடந்தது. அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட மும்பை இந்தியன்ஸ் அணியும், வென்றாலும் அரை இறுதிக்கு முன்னேறுவது அரிது என்ற நிலையில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

மும்பை இந்தியன்ஸ் அணியில் டெண்டுல்கர், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்காலிக அ‌ணி‌த ் தலைவரா க பிராவோ செயல்பட்டார். கொல்கத்தா அணியில் கெய்லுக்கு பதிலாக டேவிட் ஹஸ்ஸியும், லட்சுமி ரத்தன் சுக்லாவுக்கு பதிலாக விர்த்மான் சாஹாவும் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

பூவ ா தலைய ா வெ‌ன் ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவ‌ர ் பிராவோ தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தாரே, ஷிகர்தவான் ஆகியோர் களம் இறங்கி ன‌ ர ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தடுமாறி ன‌ ர ்.

தொடக்கத்தில் களம் கண்ட திவாரியும், கடைசி கட்டத்தில் களம் இறங்கிய ராயுடுவும் அடித்து ஆடினர். திவாரி 37 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்னும், ராயுடு 15 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஷேன்பாண்ட், முரளி கார்த்திக் தலா 2 விக்கெட்டும், திண்டா, உனட்கட், எம்.கே.திவாரி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அ‌ணி‌த ் தலைவ‌ர ் கங்கூலி, மெக்கல்லம் ஆகியோர் ஆடினர். இருவரும் நல்ல அடித்தளம் அமைத்தனர். 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன் எடுத்த நிலையில் கங்கூலி ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 13.5 ஓவர்களில் 97 ரன்னாக இருந்தது.

அடுத்து டேவிட் ஹஸ்ஸி, மெக்கல்லத்துடன் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு எளிதாக அழைத்து சென்றனர். கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக்கல்லம் 56 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 57 ரன்னும், டேவிட் ஹஸ்ஸி 14 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்ற 7வது வெற்றி இதுவாகும். 14 புள்ளிகள் பெற்ற அந்த அணி ரன் ரேட் விகிதாச்சார அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. இது மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்த 4வது தோல்வியாகும். ஐ.பி.எல்.போட்டி வரலாற்றில் அரை இறுதிக்கு தகுதி பெறாத ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments