Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவாரி அதிரடியில் மும்பை இந்தியன் 184 ரன்கள் குவிப்பு

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2010 (21:48 IST)
மும்பையில் நடைபெறும் ஐ.பி.எல். முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன் அணி சௌரவ் திவாரி அதிரடியிலும், ராயுடுவின் இன்னிங்சிலும், கெய்ரன் போலார்டின் அனாயாச மட்டை சுழற்றிலிலும் மீண்டு 20 வர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

15 ஓவர்களில் 107/4 என்று இருந்த மும்பை இந்தியன் அணி கடைசி 5 ஓவர்களில் 77 ரன்களைக் குவித்தது.

முதலில் சச்சின் டெண்டுல்கர் டேல் ஸ்டெய்ன் பந்தில் இரண்டு அபாரமான பவுண்டரிகள அடிக்க அடுத்ததாக ஸ்டெய்ன் சற்றே தள்ளி ஒரு பந்தை வீச அதனை கவர் திசையில் டெண்டுல்கர் அடிக்க அதனை ராஸ் டெய்லர் அபாரமாகப் பிடிக்க சச்சின் 9 ரன்களில் வெளியேறினார்.

ஷிகார் தவானும் 12 ரன்கள் எடுத்து கோலியின் அபாரமான ஃபீல்டிங்கிற்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் அதன் பிறகு அம்பாட்டி ராயுடு களமிறங்கி 3 விரைவு பவுண்டரிகளை அடிக்க, அபிஷேக் நாயர் 22 ரன்களை எடுக்க ஸ்கோர் 8.2 ஓவர்களில் 68 ரன்களை எட்டியபோது நாயர், கெவின் பீட்டர்சன் பந்தில் பிரவீண் குமாரின் அபார கேட்சிற்கு வெளியேறினார்.

ஆனால் அடுத்ததாகக் களமிறங்கிய டுமினியை கும்ளே வீழ்த்த மும்பை இந்தியன் அணி 10-வது ஓவரில் 77/4 என்று ஆனது.

பீட்டர்சன் 4 ஓவர்களில் 20 ரன்களையே விட்டுக் கொடுத்தார். கும்ளே 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுக்க ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது.

ஆனால் அதன் பிறகு சௌரவ் திவாரி தொடங்கினார். காலிஸ் வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரிகளுடன் அந்த ஓவரில் 17ரன்கள் குவிக்கப்பட்டது.

அதன் பிறகு கும்ளே வீசிய ஓவர் இரண்டு நோ-பால் இலவச ஹிட்களுடன் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.

அடுத்த ஸ்டெய்ன் ஓவரில் 40 ரன்கள் எடுத்த ராயுடு ஆட்டமிழந்தார். திவாரியும், ராயுடுவும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தனர்.

சௌரவ் திவாரி 31 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் சகிதம் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இவர் டேல் ஸ்டெய்னையும், கும்ளேயையும் அடித்த சிக்சர்களை மறக்க முடியாது.

கெய்ரன் போலார்ட் 13 பந்துகளில் 1 பவுண்டரி 3 மிகப்பெரிய சிக்சர்கள் சகிதம் 33 நாட் அவுட்டாக இருந்தார்.

பந்து வீச்சில் ஸ்டெய்ன் 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கும்ளே 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து கடைசி ஓவரில் 17ரன்களை விட்டுக் கொடுத்து 31 ரன்னிற்கு 1 விக்கெட் கைப்பற்றினார்.

185 ரன்கள் இலக்கை எதிர்த்து பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments