Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் ரிவ்யு கேட்காமல் சென்றாய் தவான்…. யுவ்ராஜின் கேலி!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (17:51 IST)
நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் தனது விக்கெட்டுக்கு ரிவ்யு கேட்காமல் வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி சிறப்பான வெற்றியை பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற ஷிகார் தவானின் 78 ரன்கள் மிகப்பெரிய உதவியாக இருந்தன. அவர் 18 ஆவது ஓவரில் நடராஜன் ஓவரில் எல் பி டபுள்யு மூலம் வெளியேறினார்.

ஆனால் அந்த பந்து ஸ்டம்ப்பை விட்டு வெளியே சென்றது. தவான் ரிவ்யு கேட்டு இருந்தால் அவர் தப்பி இருக்கலாம். ஒருவேளை சதம் கூட அடித்திருக்கலாம். இதுகுறித்து பேசியுள்ள யுவ்ராஜ் ‘கடைசி 2 ஓவர்களில் ஹைதராபாத் பவுலர்கள் அசத்தி ஆட்டத்தை திருப்பினர். நடராஜன். அந்த ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. ஷிகர் தவண் நல்ல பார்மில் இருக்கும் வீரர், அவர் நின்று இருந்தால் இன்னும் சில ரன்கள் சேர்ந்திருக்கும். டி ஆர் எஸ் இருந்தும் ஏன் உபயோகிக்கவில்லை. இன்னும் ஓவர்கள் இருக்கிறது என்பதே மறந்து விட்டாயே’ எனக் கேள்வி எழுப்பும் விதமாக சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடர்… பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமுக்கு இடம் மறுப்பு!

சங்ககராவும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுகிறாரா?.. KKR – புதிய பொறுப்பு!

முறைப்படிதான் பிரேவிஸை வாங்கினோம்… அஸ்வினின் பேச்சை மறுத்த சிஎஸ்கே!

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments