நான் சொன்னது லஷ்மனுக்கு கேட்டுவிட்டதோ? சஹாவின் பேட்டிங் பற்றி சேவாக் கருத்து!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:15 IST)
சில நாட்களுக்கு முன்னர் சேவாக் ஹைதராபாத் அணியில் ஏன் விருத்திமான் சஹாவை இறக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர் அவர் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் சவுரவ் திவாரி ஆகியோரை வடா பாவ் மற்றும் சமோசா பாவ் எனக் கேலி செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விருத்திமான் சஹா சிறப்பான பேட்டிங்கை மேற்கொண்டார். அவர் இந்த சீசனில் இறங்கிய முதல் போட்டி அதுதான். இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய சேவாக் ‘நான் சில நாட்களுக்கு முன்னர்தான் அனுபவமும் திறமையும் வாய்ந்த சஹாவை ஏன் இறக்கக் கூடாது எனக் கேட்டிருந்தேன். அது லஷ்மனுக்கு கேட்டுவிட்டது போல’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments