எங்களை எளிதாக நினைக்க வேண்டாம் – டெல்லி பயிற்சியாளர் பாண்டிங் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:15 IST)
இன்று நடக்க உள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன.

கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டி இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது. குவாலிபையர் 1 ல் மோசமாக தோற்ற டெல்லி அணி மும்பை அணி பழிவாங்க காத்திருக்கிறது. ஆனால் மும்பை அணியோ 5 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனுமான ரிக்கி பாண்டிங் ‘ இந்த ஆண்டு சிறந்த சீசன். கோப்பையை வெல்வதற்குதான் நாங்கள் இங்கே வந்துள்ளோம். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களை எளிதாக நினைக்க வேண்டாம். முக்கியமான ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்’ எனக் கூறியுள்ளார். டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

2வது திருமணத்தை உறுதி செய்த ஷிகர் தவான்.. அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிபவர் தான் மணமகள்..!

மகளிர் ஐபிஎல் போட்டி.. நாளை முதல் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை.. ஏன்?

பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டி கிடையாதா? ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட் எது?

அடுத்த கட்டுரையில்
Show comments