ஆளில்லா மைதானத்தில் தோனி ஓய்வு பெறுவதா? முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (16:31 IST)
தோனி போன்ற வீரர்கள் ரசிகர்கள் முன்னால் ஒரு போட்டியிலாவது விளையாடி விட்டு அதன் பின்னர்தான் ஓய்வு பெறவேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடந்தது. அப்போது இதுதான் சிஎஸ்கே அணிக்காக உங்கள் கடைசி போட்டியா எனக் கேட்டபோது தோனி ‘கண்டிப்பாக இல்லை’ எனக் கூறினார். இதனால் அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ‘அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரும் யுஏஇ-யில்தான் நடக்கும் போல் தெரிகிறது. அப்படி நடந்தால் 2022 ஐபிஎல் வரை தோனி ஆடியே ஆக வேண்டும். ஏனென்றால் தோனி போன்ற வீரர் ஆளில்லா மைதானத்தில் ஓய்வு பெறக் கூடாது. அவர் ரசிகர்கள் முன் ஒரு போட்டியாவது விளையாடி அதன் பின்னர்தான் ஓய்வு பெறவேண்டும் ‘ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments