கோலியின் கேப்டன்சியை மெச்சிய கம்பீர்… கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (15:28 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் நேற்றைய போட்டியில் கோலி கேப்டன்சி சிறப்பாக இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியை மிக எளிதாக வென்றது ஆர்சிபி. முதலில் பந்துவீசிய அந்த அணி 84 ரன்களுக்குள் கே கே ஆரை சுருட்டியது. அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 ஓவர்களில் 3 விக்கெட்களை எடுத்து 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். எப்போதும் அவரை பவர்பிளேயில் பயன்படுத்தாத கோலி நேற்று பயன்படுத்தியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோலியின் இந்த முடிவை கவுதம் கம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார். கோலி மற்றும் கம்பீருக்கு இடையே மைதானத்துக்கு உள்ளேயே பல முறை மோதல்கள் வெடித்துள்ளன. அதுபொல கம்பீர் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் முதல்முறையாக அவரைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments