டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு: ரோஹித்துக்கு பதில் பொல்லார்ட் கேப்டன்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (19:39 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று 24வது போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி , பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை அணி கேப்டனாக பொல்லார்ட் விளையாடவுள்ளார். காயம் காரணமாக ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை
 
இன்றைய ஆடும் மும்பை 11 பேர் அணியில், 'லாட், டீகாக், யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ருணால் பாண்ட்யா, சஹார், ஜோசப், பெஹ்ரண்ட்ராப், மற்றும் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் ஆடும் பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கெய்லே, கே.கே.நாயர், கான், மில்லர், மந்தீப் சிங், கர்ரான், விஜோலின், அஸ்வின், ஷமி, ராஜ்பூத் ஆகியோர் உள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments